செய்திகள்

உடல் நலம் பலம் பெற , மனம் மகிழ்ச்சி அடைய வாழைப்பழம் தரும் 10 நன்மைகள்

Makkal Kural Official

அறிவியல் அறிவோம்


வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது . அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.

வாழைப்பழம் சாப்பிடுவதன் பயன்கள் என்னென்ன என்பதை படித்தறியுங்கள். வாழைப்பழம் கொட்டையில்லா பழமாகும் . வாழைமரம் மரம் வகையை சார்ந்தது அல்ல. உலகின் மிகப்பெரிய மூலிகை வகை. “தினமும் ஓர் வாழைப்பழம் சாப்பிட்டால் மருத்துவரைக் காண தேவையிருக்காது”

உங்களுக்கு தெரியுமா பழைய ஆங்கிலத்தில் ‘பழம்’ என்றாலே ‘ஆப்பிளை’ தான் குறிக்குமென்று? சீரான உணவு பழக்கத்திற்கு பழங்களை தவிர்க்கமுடியாது என்ற நிலை ஆகிவிட்டது. அதுவும்

வாழைப்பழம் மிக எளிதாக கிடைப்பதால் உலகில் மிக அதிகமானவர்கள் சாப்பிடும் பழமாக உள்ளது. வாழைப்பழத்தில் பொதிந்திருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தேவையானது.

மேலும், பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளதோடு, நுண்ணூட்டச் சத்துக்களான வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றை வாழைப்பழம் வழங்குகிறது.

வாழைப்பழம் #2. பெருங்குடலை சுத்தமாக வைத்து குடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்கிறது

அதிக நார்ச்சத்து உள்ளதால் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்க உதவும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், சீரான குடல் இயக்கம் ஆரோக்கியமான செரிமான இயக்கத்திற்கான ஒரு அடையாளமாக இருப்பது பற்றியும் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகளை தடுக்கும் விதம் குறித்தும் விவரிக்கிறது. ஒழுங்கற்ற குடல் இயக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. பெருங்குடல் சுத்தமாக இருப்பதன் நன்மைகள் தெளிவாகத் தெரிந்தாலும், இன்றைய உலகின் பதப்படுத்தப்பட்ட உணவு முறையில் இது பெரிய சவாலாக உள்ளது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து 12 சதவிகிதம் உள்ளது. மேலும், மலச்சிக்கலை சரிசெய்யும் தன்மையும் உள்ளது. பச்சை வாழைப்பழம் (பச்சை வாழை வகை) இதற்கு ஏற்றது, ஏனெனில் அதில் resistant starch எனப்படும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இது கரையாத நார் போல செயல்பட்டு குடல் இயக்கத்தை சிறப்பாக வைக்கிறது.

உங்களுக்கு வாழைப்பழத்தை சாப்பிட்டால் அவை உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும் என்பதற்கான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் உள்ளன. வாழைப்பழத்தில் செரோடோனின் என்ற முக்கியமான ஹார்மோன் (ரத்தத்தில் உள்ள முக்கிய உட் சுரப்பி நீர்) உள்ளது. இது நமது நல்வாழ்விற்கும் சந்தோஷத்திற்கும் தேவையான மனநிலை மற்றும் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கும். வைட்டமின் B6 ன் சத்தான மூலமாகவும் இது உள்ளது. மேலும், மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாக இது வழிசெய்கிறது.

வாழைப்பழங்கள் நுண்ணுயிர் கலந்த உணவு வகையை சேர்ந்தது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் குடல் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா) உருவாக உறுதுணையாகிறது.

ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாவது, நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, போதுமான அளவு புரதச்சத்து, வாழைப்பழங்களில் உடலுக்கு அத்தியாவசியமான அமிலங்கள் மற்றும் குறைந்தது 11 வைட்டமின்களும் தாது சத்துகளும் இணைந்து செயல்படுகின்றன. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் தினசரி உட்கொள்ள வேண்டிய 11 ஊட்டச்சத்துகளில் 5 உள்ளது: இரும்பு, துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம். இது மேலும், ஓர் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான மேலும் நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது.பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளான வாழைப்பழம் போன்றவற்றின் செயல்திறன், ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இருதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறப்பாக துணைநிற்பது அறிவியல் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் சில ஆய்வுகளில், பொட்டாசியம் நிறைந்த உணவு ரத்த ஓட்டத்தில் சோடியம் அளவை கட்டுப்படுத்துதல் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என காட்டுகின்றன.

பொட்டாசியம் சத்தைப் பெறுவதற்கு வாழைப்பழம் ஓர் மிகச்சிறந்த இயற்கையான மூலம். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் தினசரி உட்கொள்ள தேவையான பொட்டாசியத்தில் 12 சதவிகித அளவைக் கொண்டுள்ளது.

மாதவிலக்கு பிரச்சனையில் வாழைப்பழம் உதவும்.

வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்து உள்ளது. இது தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும். அதுபோலவே இதிலுள்ள இரும்பு சத்து மாதவிலக்கு நோய் அறிகுறி சார்ந்த பிரச்சனையை எதிர்க்க உதவும். பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *