செய்திகள்

உடல் நலக்குறை: இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஆக. 24–

உடல் நலக்குறைவால் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் அவர் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் அவரின் நடிப்பு பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாரதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக அவரின் மகன் மனோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கமான சர்க்கரை நோய் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்குச் சென்றார். சோதனையில் உப்பின் அளவு குறைந்ததால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்ததை அடுத்து, மருத்துவர்கள் சில நாட்கள் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிவுறுத்தினர். அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஓய்வுக்குப் பின் வீடு திரும்புவார்’ என தெரிவித்தார்.

அல்லி நகரத்தை, டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் பாரதிராஜா விரைவில் மீண்டு வந்து, கலையுலகை ஆண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *