வாழ்வியல்

உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் தயிர், கோஸ்

புரோட்டீன்களை உள்ளடக்கிய தயிர் வெயில் நாட்களில் தவிர்க்க முடியாத உணவு. அதேபோல் அதிக உணவு உண்ண விரும்பாதவர்கள் தயிரை உண்டால் உடனே வயிறு நிறைந்து உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும். தயிரில் இருக்கும், புரொபியோடிக்ஸ் (probiotics ) ஜீரண சக்தியை சீராக்கும்.

உடல் எடைக் குறைப்பிற்கு உதவும் கோஸ் வெயில் காலத்திற்கும் ஏற்றது. உடலில் உள்ள தேவையில்லாத நீரையும் வற்றவைத்துவிடும். அதேசமயம், நீரேற்றத்தை அதிகரிக்கச் செய்யும். இது சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி வயிறு மந்தமாக இருந்தாலும் சரி செய்துவிடும்.

ஃபைபர் அதிகம் கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் பேரிக்காய். இது சரும வறட்சியையும் நீக்கக் கூடியது.

நீங்கள் உடல் நீரேற்றத்திற்காக அதிக நீர் அருந்துகிறீர்கள் என்றால் க்ரீன் டீயையும் அருந்துங்கள். இது நீருக்கு சிறந்த மாற்று. இது நீரைக் காட்டிலும் அதிக நீரேற்றத்தை அளிக்கக் கூடியது.

திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி : இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது. வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் தவிர்க்க உதவும்.

கிர்ணி பழம் , முலாம் பழம் என அழைக்கப்படும் இந்த பழமும் கோடைக்கால வரவில் தர்பூசணிக்கு அடுத்து முக்கிய இடம் பிடிக்கக் கூடியது. இதை தினமும் ஜூஸாக அருந்தலாம். இதனால் உடலின் வெப்பம் தணியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *