வாழ்வியல்

உடல் எடையை குறைக்க உதவிடும் எளிய வழிகள்–1

Spread the love

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது. மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என, அதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். உணவில் கட்டுப்பாடு இல்லாமலும், உடம்பு மீது அக்கறை இல்லாமலும் இருந்துவிட்டு, உடல் எடை அதிகரித்ததற்குப் பிறகு ஜிம்முக்கும், மருத்துவமனைக்கும் செல்பவர்கள் அதிகம்.

சின்ன சின்ன விசயங்களில் அக்கறையோடு, சிலக்கட்டுப்பாடுகளோடு இருந்தால் ஜிம்முக்குப் போகாமல், மருத்துவரை நாடாமல் உடல் எடையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்… அவர்கள் தரும் 10 ஆலோசனைகள் வருமாறு:–

* சர்க்கரையை தவிர்த்திடுங்கள்

உடல் எடை அதிகரிக்க சர்க்கரை முக்கியக் காரணம். அதனால் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். பால், டீ, காபியுடன் சேர்க்கும் சர்க்கரையைத் தவிர்த்தால் மட்டும் போதாது. ஸ்வீட், சாக்லேட்டுகளையும் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல… டெஸர்ட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை `சுகர்-ஃப்ரீ’ டயட்டுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை குறைக்கவும் முடியும்.

* எலுமிச்சை கலந்த தண்ணீர்:

தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும். இந்தக் கலவையுடன் சிறிது தேன் சேர்த்தும் அருந்தலாம்.

* சின்னச் சின்ன உடற்பயிற்சிகள்

வீட்டில் சிறு சிறு உடற்பயிற்சிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரலாம். இது உடல் எடை குறைய மிகவும் உதவியாக இருக்கும்.

* சாப்பாட்டில் கவனம்:

சாப்பிடும்போது, சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டி.வி பார்த்துக் கொண்டோ மொபைலில் பேசிக்கொண்டோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முழு கவனமும் சாப்பாட்டில் இல்லாதபோது வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டு விடுவோம். அதனால், டி.வி,மொபைல் போன்றவற்றிலிருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *