வாழ்வியல்

உடல் எடையைக் குறைத்திட உதவும் வளர்சிதை மாற்றம்–1

———————————எவ்ளோ சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்காங்களே என்று ஒல்லியாக இருப்பவர்களை பார்க்கும் போதெல்லாம் பொறாமை ஏற்படுவது இயல்பு. அவர்கள் ஒல்லியாக இருப்பதற்கு உடலில் செயல்படும் வளர்சிதை மாற்றமே காரணம்.
நாம் தினமும் சாப்பிடும் உணவை ஆற்றல் திறனாக மாற்றுவதே வளர்சிதை மாற்றம். தாவரம், விலங்கு, மனிதன் என்று அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலை சேமித்து, தேவைப்படும்போது வெளிப்படுத்த மெட்டபாலிசம் தேவை.
நாம் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தாலும், சேமித்து வைத்திருக்கும் ஆற்றலை நம் உடல் பயன்படுத்தும். அதன்படி, ஒவ்வொரு மனிதனுக்கும் வளர்சிதை மாற்றம் மாறுபடும். இதனால் தான் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். அதேபோல், குறைவாக சாப்பிட்டாலும் சிலர் குண்டாகவே இருப்பார்கள்.
சிலருக்கு வளர்சிதை மாற்றம் மெதுவாக செயல்படும். அவர்களுக்கு உடலில் உள்ள கலோரிகளை எரிக்க அதிக நேரம் தேவைப்படும். இதனால், கலோரிகள் உடலில் தேங்கி உடல் எடை கூடுகிறது. அதேபோல் சிலருக்கு வளர்சிதை மாற்றத்திறன் அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் அதிகம் சாப்பிட்டாலும், எடை கூடும் ஆபத்து குறைவாகவே இருக்கும்.
உடலுக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்றாலும் வளர்சிசதை மாற்ற விகிதம் குறையும். எனவே வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க தினமும் 6–8 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களையும் அதிகப்படியான கொழுப்புக்களையும் குறைக்கும்.
சாப்பிடுவதற்கு முன்பு ஐஸ் தண்ணீரை குடித்தால் உங்கள் வயிறு சுருங்கும். இதனால், நீங்கள் சாப்பிடும் அளவு குறைந்து, வயிறு நிரம்பியதாக உங்களுக்கு தோன்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *