வாழ்வியல்

உடல் எடையைக் குறைத்திட உதவும் வளர்சிதை மாற்றம்–2

ஒரு நாளைக்கு 4–6 வேளை உணவு சாப்பிட வேண்டும். உணவைத் தவிர்க்க கூடாது. உணவைத் தவிர்த்தால் வளர்சிதை மாற்றத் திறன் குறையும். காலையில் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே அன்றைய மெட்டபாலிசத்தின் திறம் நிர்ணயிக்கப்படும்.

சீக்கிரமாக எழுந்துவிட்டு லேட்டாக சாப்பிட்டாலும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) பாதிக்கப்படும். தொடர்ந்து ஒரே அளவிலான உணவு எடுத்துக் கொள்வதால் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் ஒரே சீரான அளவில் இருக்கும்.

நார்த்சத்து நிறைந்த பழங்களையும், உணவுகளையும் சாப்பிடுவதன் மூலம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம். பிஸ்கெட், பிரெட், இனிப்புகள், பாஸ்ட் புட்ஸ், பொறித்த உணவு, கேக், நொறுக்கு தீனி, மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்படும் உணவு, சாலையோர தின்பண்டங்கள், ரெடி மேட் உணவுகள் உள்ளிட்டவற்றில் ட்ரான்ஸ் பேட் அதிகளவில் உள்ளன.

ட்ரான்ஸ் பேட் ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். பாஸ்ட் புட்களை உண்ணும் வரை நீங்கள் விரும்பும் உடலை பெற முடியாது. எனவே ட்ரான்ஸ் பேட் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வாரத்திற்கு 6 நாட்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி, 2–3 கிமீ நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். லிப்ட்களை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். அதே போல் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் கால்களை அசைப்பதன் மூலம் கலோரிகளை எரிக்க முடியும் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *