சிறுகதை

உடல் அறிவு

அம்மா, அப்பா பால் வாங்கப் போய் விட்டாரா என்று மகன் பாலு அம்மாவிடம் கேட்டார்.
அவர் எப்போதும் போல் ஐந்து மணிக்கே போய் விட்டார் என்று அம்மா சொன்னார்.
சரி நாளையில் இருந்து அவர் போய் பால் வாங்கி வர வேண்டாம்.
ஏன்பா….. என்றார்.
இல்லை அம்மா, இன்று முதல் பால்காரரை வீட்டிற்கு வந்து பால் ஊத்தச் சொல்லி இருக்கிறேன் என்றார் பாலு.
அப்பா சுப்பைய்யா பாலுடன் காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு வந்து மனைவி சிவகாமியிடம் கொடுத்தார்.
உடனே அவர் கணவரிடம் நாளையிலிருந்து நீங்கள் பால் வாங்கக் காலையில் செல்ல வேண்டாம் என்கிறார். என்ன நீ எனக்கு புதிதாய் உத்தரவு போட ஆரம்பித்து இருக்கிறாய் என்றார்.
அப்பா இது நான் போட்ட உத்தரவு இல்லை. நம்ம பிள்ளை பாலு போட்ட உத்தரவு என்றார்.
அவர் உத்தரவு போடுற அளவுக்கு நான் ஆகிவிட்டேனா என்று சீறினார்அப்பா .
சத்தம் கேட்டு அங்கே வந்த பாலு,
அப்பா நீங்கள் எதற்கு காலையில் சீக்கிரம் எழுந்து கஷ்டப்பட்டு வெளியே சென்று பால் வாங்க வேண்டும். காலை நேரத்தில் கொஞ்சம் சுகமாக தூங்கிப்பாருங்கள். அதில் உள்ள சுகம் நன்றாக இருக்கும். அதனால் பால்காரரை காலையில் நம் வீட்டிற்கு வந்து பாலை ஊற்றச் சொல்லியிருக்கிறேன் என்றார் பாலு.
நான் இந்த வீட்டில் இருக்கும் வரை நான் தான் போய் பால் வாங்கி வாங்கி வருவேன். அப்படி இல்லாவிட்டால் அம்மாவை அழைத்துக்கொண்டு ஊருக்குப் போகிறேன் என்றார்.
அமைதியாக உள்ளே வந்து கணவரைப் பார்த்து உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றார் மருமகள் சித்திரா.
என்ன சொல்றே சித்திரா என்றார் பாலு.
‘‘நீங்கள் எது சொன்னாலும் உங்கள் அப்பா கேட்க மாட்டார். அது மாதிரி நான் சொன்னாலும் என் மாமியார் கேட்க மாட்டார்கள்.’’
நீ என்ன சொல்லி அம்மா கேட்காமல் இருக்கிறார்கள் . நான் வேண்டுமானால் சொல்லி பார்க்கட்டுமா என்றார் பாலு.
கிரைண்டரில் மாவு ஆட்டுகிறேன். மிக்ஸியில் சட்னி அரைக்கிறேன் என்று நானும் தினம் தினம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். கேட்காமல் அவர் இஷ்டப்படி கஷ்டப்பட்டு செய்கிறார் . மற்றவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள் என்றார்.
யார் உன்னைக் கேலி செய்கிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் என்றார்.
ஏன் சித்திரா வயதான உங்கள் மாமனாரையும் மாமியாரையும் வேலைக்காரர்கள் போல் வேலை வாங்குகிறாய் என்கிறார்கள். அவர்கள் மீது கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு நான் தான் இருக்கிறேன். அதனால் தான் காலையில் எனக்கு பிரஷர் அதிகமாகிறது.
அப்படி என்றால் அம்மா தினந்தோறும் செய்கின்ற வேலையை நீயாவது செய்து பாரேன் என்றார்.
என்னால் எப்படி செய்யமுடியும் காலையில் தண்ணீர் வாளியை தூக்கிக்கொண்டு 30 படிகள் இறங்கி கீழே போய் வாசல் தெளித்து கோலம் போடு
போடுகிறார் .பிறகு அம்மியில் சட்னி அறைக்கிறார். ஊறவைத்து துணிகளை சோப்பு போட்டு துவைக்கிறார். மதியமானால் அரிசியையும் உளுந்தையும் ஊறப்போட்டு ஆட்டுக்கல்லில் மாவு அறைக்க உட்காருகிறார். என்னால் இதுவெல்லாம் செய்ய முடியாது.
அதைவிட முக்கியம் இரவு ஆனால் இரண்டு பிள்ளைகளையும் சீக்கிரம் சாப்பிடச் சொல்லி பேரப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஜோடியாகக் காற்று வாங்கப் போய் விடுகிறார்கள். பிள்ளைகள் வெளியே சொல்ல முடியாமல் போய் வருகிறார்கள். நம்முடன் வந்து படுக்க மாட்டேன் என்கிறார்கள். சிறுவயதிலேயே இரண்டு பிள்ளைகளையும் மூளைச்சலவை செய்து வைத்திருக்
கிறார்கள் .
இதனால் நமக்கு தானே மகிழ்ச்சி என்றதும் சித்திரா பாலுவைப் பார்த்து முறைத்தார்.
சரி பிள்ளைகள் பள்ளிக்குப் போனதும் நாம் இருவரையும் அமரவைத்து சமாதானமாகப் பேசி அவர்களிடம் சொல்வோம் என்றார் பாலு.
நான் ஒன்னும் இடையில் பேச மாட்டேன் நீங்கள் தான் பேச வேண்டும் என்றார் சித்திரா.
பாலு அப்பாவையும் அம்மாவையும் டிபன் சாப்பிட்டு முடித்தவுடன் அமரச் சொல்லி நாளை முதல் நீங்கள் வேலை ஏதும் செய்ய வேண்டாம். நானும் சித்திராவும் நீங்கள் செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்றார் பாலு.
சுப்பையா மனைவி சிவகாமியிடம் அம்மா பெட்டியை கட்டு நாம் ஊருக்கு புறப்படுவோம். அவர்கள் வேலையைச் செய்து கொள்கிறார்களாம் என்றார்.
அப்பா நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள கொண்டிருக்கிறீர்கள். வயதான காலத்தில் நாங்கள் உங்களை வேலை வாங்குகிறோம் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் கேலி செய்கிறார்கள். அதனால் தான் நாங்கள் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் பாலு.
எங்களுக்கு என்ன கை கால் ஓய்ந்து விட்டதா? நன்றாகத்தானே
இருக்கிறது . அப்படி வேலை செய்தால் என்ன தப்பு என்றார் சுப்பையா.
இதற்கு மேலே என்ன சொல்வதென்று தெரியவில்லை அப்பா என்றதும் சிவகாமி பேச ஆரம்பித்தார்.
இந்தாப்பா இந்தாம்மா எங்களுக்கு சின்ன வயதிலிருந்து இந்த மாதிரி வேலை செய்து பழகி விட்டது . திடீரென்று நிப்பாட்ட முடியாது. அப்படி நிப்பாட்டினால் ஏதாவது ஆகிவிடும் என்றார்.
உடனே சுப்பைய்யா குறுக்கிட்டு உண்மையைச் சொன்னால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்.
நம் உடலில் நிறைய பாகங்கள் உள்ளது .அதை வேலை செய்ய விடாமல் சும்மா விட்டால் செயலை செய்ய மறந்துவிடும். தன் தன்மையையும் இழந்து விடும். இதற்குப் பெயர்தான் உடல் அறிவு என்பது . உடல் உறுப்புகளை அதன் அதன் வேலையைச் செய்ய விட்டால்த்தான் உடல் பாகங்கள் நலத்துடன் தன்மையாக இருக்கும். இதை உங்களை உங்களை கேலி செய்பவர்களிடம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றார்.
எல்லா வேலைகளும் தினமும் செய்து வந்தால் தான் உடலும் உள்ளமும் நலமாக இருக்கும்.
உடலுக்கு இருக்கும் அறிவை நாம் தடை செய்யக்கூடாது என்றார் சுப்பையா.
உள் அறிவுடன் பதில் கேள்வி கேட்காமல் சென்றனர் பாலுவும் சித்திராவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *