வாழ்வியல்

உடலை சுறுசுறுப்பாக்கும் தேன்!

தேன் உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது . இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்; சுறுசுறுப்பு தன்மை கூடும்.

உடல் அழகான தோற்றம் பெறும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு இளம் சூடான பசும்பாலில் சிறிது தேனை கலந்து பருகி வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படாத ஆழமான தூக்கம் ஏற்படும்.

சிறிதளவு தேனை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு எந்த வகையான ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கும். இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.

காலை உணவிற்குப் பின் தினமும் மாதுளம் பழச்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியம் உண்டாகும். புது ரத்தமும் உற்பத்தியாகும் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *