நல்வாழ்வுச் சிந்தனைகள்
மாம்பழத்தில் வைட்டமின்-ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. இதில் சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின்-சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும் உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். பப்பாளி வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. இதிலும் வைட்டமின்-ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும் சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.
அன்னாசி பழத்தில் வைட்டமின்-பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.