நல்வாழ்வு சிந்தனைகள்
தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளது, அது உடலில் வீக்கத்தைக் குறைக்கின்றன. மேலும் புரோபயாடிக் உணவுகள் செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஜலதோஷத்தின் காலத்தையும் நீர்க்கோர்வை , தும்மல் , இருமல் காலத்தையும் இரண்டு நாட்களாக குறைத்து அவற்றின் தீவிரத்தை 34 சதவீதம் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பால் பொருட்களை விரும்பாதவர்கள் ஊறுகாய், மிசோ, டெம்பே, கிம்ச்சி, புளிப்பு ரொட்டி மற்றும் சில சீஸ்கள் போன்ற பிற புரோபயாடிக் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்ட பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் செல்வதைத் தடுக்க கைகளை நன்றாக கழுவுங்கள். வெளியே போய்விட்டு வரும்போது கைகால்களைக் கழுவிவிட்டு அடுத்தவேலை பார்க்க வேண்டும் என்ற நம் பழம் பெருமை வாய்ந்த பழக்கத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
கோவிட்-19 க்கு எதிரான நமது போராட்டத்தின் ஒரு பகுதியாக கைகளை நன்றாக கழுவும் பழக்கத்தை பெரும்பாலான மக்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் கிருமிகளை அகற்றுவதற்கான சிறந்த வழி உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவுவதாகும். கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.