வாழ்வியல்

உடலில் உள்ள கிருமிகள் வெளிவர பயனுள்ள நாட்டு மருத்துவக் குறிப்பு

உடலில் உள்ள கிருமிகள் வெளிவர பயனுள்ள நாட்டு மருத்துவக் குறிப்பு ஒன்று இருக்கிறது.

அது வருமாறு :–

வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வெளிவந்துவிடும்.

* இருமல் தீர

இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

* காதில் சீழ் வருதல் தீர

இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

* தொண்டை புண்ணிற்கு

நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

* தலைவலிக்கு

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

* சீதபேதிக்கு

நாட்டுச் சர்க்கரையும் நெய்யும் கலந்து சாப்பிடத் தீரும்.

* யானைக்கால் வீக்கம் வடிய

முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

* விக்கல் தீர்க்கும் இந்துப்பு

இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

* கிருமிகள் விழ

வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வெளிவந்துவிடும்.

* புண்கள் ஆற

தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

* முடி உதிர்வதை தவிர்க்க

நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

* கட்டிகள் உடைய

சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் கட்டி பழுத்து உடையும்.

* அண்ட வாத கட்டு

பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *