நல்வாழ்வு
உடற்பயிற்சி , நடைப்பயிற்சி செய்யும் நன்மைகள் ஏராளம் என்று புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
வயதானால் உடலின் அனைத்து உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய் செயலிழந்து போகும். மூளையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் உடற்பயிற்சி இவற்றை எல்லாம் மாற்றியமைக்கும் என புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையின் வேதியலை மாற்றி, வயதாவதை குறைக்கிறது என்பது அறிவியல் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
வயதான ஒத்திசைவுகளைப் பாதுகாக்க உடற்பயிற்சி மூளையின் வேதியியலை மாற்றுகிறது; இதனால் சுறுசுறுப்பாக இருக்கும் வயதான பெரியவர்களிடம் மேம்பட்ட நரம்பு பரிமாற்றம் காணப்படுகிறது. இந்த ஆய்வு சொல்லும் தகவல் என்ன தெரியுமா?
வயதானவர்கள் சுறுசுறுப்பாக இருக்கும்போது அவர்களின் மூளையில் ஆரோக்கியமான அறிவாற்றலைப் பராமரிக்க நியூரான்களுக்கு இடையில் அதிகமான புரத வகைகள் உள்ளன. இவை நியூரான்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளை மேம்படுத்தும் புரதங்களே என்பதும் தெரிய வந்துள்ளது.
இப்படி இணைப்புகளை உருவாக்கி, மேம்படுத்தும் புரத வகைகள் அதிகமாக இருப்பதை சான் பிரான்சிஸ்கோ ஆய்வு கண்டறிந்துள்ளது.
இதுதொடர்பான பாதுகாப்புத் தாக்கம் சம்பந்தப்பட்ட தகவல்கள், அல்சைமர் மற்றும் பிற நரம்பியக்கடத்தல் நோய்களால் இறந்தவர்களின் மூளையில் உள்ள நச்சுப் புரதங்களிலும் காணப்பட்டது.
“நரம்புகளின் இணைப்பிலுள்ள புரத ஒழுங்கமைப்பு (synaptic proteinregulation) என்பது உடல் செயல்பாடுகளுடன் நேரடித் தொடர்புடையது;
இவை நாம் காணும் நன்மை பயக்கும் அறிவாற்றல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை, மனிதத் தரவைப் பயன்படுத்தி செம்மையாகக் காட்டுகின்றனர். இதுதான் அவர்களின் முதல் பணி” என நரம்பியல் உதவி பேராசிரியரும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான கெய்ட்லின் கசலெட்டோ ( Kaitlin Casaletto ) கூறியுள்ளார். உடற்பயிற்சி என்பது அல்சைமர் நோயின் தன்மையைக் குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.