புதுடெல்லி, ஜன. 16–
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே. வினோத் சந்திரனுக்கு இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி சந்திரன் பதவியேற்றதையடுத்து, தலைமை நீதிபதி உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
தலைமை நீதிபதி கன்னா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், ஜனவரி 7ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், கேரள ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சந்திரனின் பெயரைப் பரிந்துரைத்தது. ஆனால் நீதிபதி சந்திரன் கடந்த 2023ம் மார்ச் மாதம் பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.
இதையடுத்து, நீதிபதி கே.வினோத் சந்திரனை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் ஒருமனதாகப் பரிந்துரை செய்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.
சீனியாரிட்டியின் அடிப்படையில் நீதிபதி கே. வினோத் சந்திரன் நியமிக்கப்பட்டார்.
பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலீஜியத்தின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, நீதிபதி கே.வினோத் சந்திரனை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் ஒருமனதாகப் பரிந்துரை செய்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். .தினமணி’யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர… WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threadsஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் “,”dateCreated”:”2025-01-16T06:31:42Z”,”dateModified”:”2025-01-16T06:31:42Z”,”name”:”உச்ச நீதிமன்ற நீதிபதியாக வினோத் சந்திரன் பதவியேற்பு