செய்திகள்

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா: எஸ்.ஏ.போப்டே பரிந்துரை

டெல்லி, மார்ச் 24–

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதி என்.வி.ரமணாவை அடுத்த தலைமை நீதிபதியாக இன்று பரிந்துரைத்துள்ளார்.

47’வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.ஏ. போப்டே, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 18 ந்தேதி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நிலையில், ஏப்ரல் 23 ந்தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக, ரமணாவை எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார்.

இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நீதிபதி ரமணா இந்தியாவின் 48 வது தலைமை நீதிபதியாக பணியாற்றுவார். சீனியாரிட்டி விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த பரிந்துரை செய்யப்பட்டது.

தற்போதைய தலைமை நீதிபதி போப்டே இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி, அதன் நகலை நீதிபதி ரமணாவிடம் ஒப்படைத்துள்ளார். விதிமுறைகளின்படி, தற்போதைய தலைமை நீதிபதியிடமிருந்து எழுத்துப்பூர்வ தொடர்பு, அவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, வழக்கம்போல் அனுப்பப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி ரமணா பொறுப்பேற்பார். ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணத்தை வழங்குவார். ரமணா 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ந்தேதி ஓய்வு பெற உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *