நாடும் நடப்பும்

உக்ரைன் போரில் இந்தியாவின் நடுநிலை முரண்


ஆர். முத்துக்குமார்


உக்ரைனில் ரஷ்யா எடுத்து வரும் போர் நடவடிக்கைகள் 50வது நாளை நெருங்குகையில் உலக நாடுகள் அமெரிக்க நிலையை ஆதரித்து ஒரு புறமும், சீனா, இந்தியா உட்பட சில நாடுகள் ரஷ்யாவின் பக்கமுமாக பிரிந்து இருக்கிறது.

இந்தியா உண்மையிலேயே ரஷ்யாவை ஆதரிக்கிறதா? அப்படி ஒரு கருத்தை ஒன்றிய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சும் கொண்டு வந்த தீர்மானத்தை சீனா தனது ‘வீட்டோ ‘ அதிகாரத்தை பயன்படுத்தி அத்தீர்மானத்தை ரத்து செய்ய வைத்தது.

அப்போது இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலையை கடைப்பிடித்தது.

பல நாடுகள் ஐநா சபை கூட்டத்தில் உக்ரைன் மீது தாக்குதல் தவறு என்றும் சர்வதேச சட்டங்களை புறம் தள்ளி விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

அந்தக் கருத்துகளை ஏற்க மறுத்து அதை ஆதரிக்கப் போவது கிடையாது என்ற நிலைப்பாட்டை தான் இந்தியா எடுத்தது. அது சரியான முடிவா?

முன்பு 1999ல் மார்ச் 24 முதல் ஜூன் 10 வரை அமெரிக்காவின் உத்தரவின் பேரில் நேட்டோ படைகள் யுகோஸ்லாவியா மீது குண்டு மழை பொழிந்தது.

இது மனித நேய தாக்குதல் அதாவது ‘Nobel Amil’ என்று பிரச்சாரம் செய்தது அமெரிக்கா.

அந்நாட்டில் கோசோவா மற்றும் அல்பேனியா அகதிகள் இன, மத வேறுபாடுகளைக் காரணம் காட்டி குடுமிபிடி சண்டையில் இறங்கினர், அது பெரும் சண்டையாக மாற பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.

அது உள்நாட்டு கலவரம், ஒரு நாட்டின் குறிப்பிட்ட மாநிலத்தில் துவங்கிய சண்டை சச்சரவு ஆகும்!

ஆனால் நாட்டோ அமைதிப் படையை அனுப்பி கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்தது.

போசினியா, செர்ப் ராணுவ அதிகாரிகள் மீது எப்–16 அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்கியது, இது தான் நாட்டோ படையின் முதல் முறையாக போர் விமானங்கள் கொண்டு தரைத் தாக்குதலை நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் பல அப்பாவிகள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து நாட்டோ என்பது உலக ஆதிக்கத்திற்காக உருவானதுதான் நாட்டோ, அது அமெரிக்காவின் கைப்பாவை என்பதையும் உலகம் புரிந்து கொள்ள துவங்கியது.

அதை நாட்டோ அமைப்பு அமெரிக்காவின் உத்தரவை ஏற்க எந்த நியாயமும் கிடையாது.

ஆனால் இன்றோ நாடோவில் அங்கம் வகிக்கக் கூடாது என்று உக்ரைனிடம் கூறிவிட்டது ரஷ்யா. தனது எல்லை நாடான உக்ரைனில் நாட்டோ தலையீடு கூடாது என ரஷ்யா கோருவது நியாயம் என்று புரிகிறது.

அன்று யூகோஸ்லாவியா போன்றே பின்னர் அமெரிக்கா உத்தரவிட நாட்டோ ரஷ்யாவின் எல்லையில் ராணுவ தாக்குதலை தொடுக்காது என்று எப்படி நம்புவது?

உக்ரேனின் நேட்டோ கோரிக்கையை ஏற்கக் கூடாது என்பது தான் ரஷ்யாவின் ஒரே வேண்டுகோள், அதை ஏற்க உக்ரைன் மறுத்துததன் பின்னணியில் அமெரிக்காவின் தலையீடுகள் இருப்பதை மறுக்க முடியாது.

முன்பு செர்பியாவை தாக்க மாட்டோம் என்று உலகிற்கு உறுதி தந்து இருந்த நாட்டோ தான் திடீரென தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தலையீடு ஐநாவில் பதிவானது, ஆனால் அமெரிக்காவோ, கொசோவா, அல்பேனிய மக்களை பாதுகாக்கவே இந்த போர் என்று கூறி தாக்குதலைத் தொடர்ந்தது.

அமெரிக்காவின் முரண்பாடு, 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மக்களை பாதுகாக்க 78 நாட்கள் விமானப்படை தாக்குதல்களை நடத்தியது.

இன்றோ ரஷ்யா 00 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் தங்களது எல்லைப்பகுதி நாடான உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களை பாதுகாக்கவே ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் சரியா? என்பதை விரைவில் தெரிந்து கொள்ள வரலாற்றுப் பக்கங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது!

இந்நிலையில் இந்தியா அணிசேரா கொள்கையை கடைபிடிப்பதும் நியாயமே! அமெரிக்காவும், ரஷ்யாவும் மோதிக்கொள்ள பல புது வர்த்தக வசதிகள் உருவாக்குவதை உற்று கவனித்து வருகிறோம் என்று பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறி வருகிறார்கள்.

நாம் ரஷ்யாவிற்கு சாதகமாக நடுநிலை வகிப்பது முரணாகத் தோன்றலாம், ஆனால் ரஷ்யா நமது நேச நாடு, நலன் மீது எல்லா நேரத்திலும் அக்கறை கொண்டிருக்கிறது.

நமது கச்சா எண்ணெய் தேவைகளை, நிலக்கரி தேவைகளுக்கு நேரடியாக உதவுகிறது. விண்வெளி சாதனை சகாப்தங்களைப் பெற்றுத் தந்த பெருமையும் ரஷ்யாவை தானே சாரும்.

ஆகவே என்று நாம் நடுநிலை வகித்து ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

விரைவில் உக்ரைனில் போர் பதட்டம் தொடராமல் கட்டுப்படுத்தப்பட அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கும் இந்தியா முயற்சிக்க களமிறங்கிட தயங்கக் கூடாது, அது காலத்தின் கட்டாயமாகும்.


Leave a Reply

Your email address will not be published.