நாடும் நடப்பும்

உக்ரைன் கையில் ஆயுதங்கள்


-: ஆர் முத்துக்குமார் :-


2021–ல் ஆதிக்கம் செலுத்திய கோவிட் 19 அச்சுறுத்தல் மற்றும் மொத்த ஊரடங்குக்குப் பிறகு 2022–ல் நிச்சயமாக உக்ரைன் நெருக்கடியாகும். இது உலகளாவிய அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கு அழிவை ஏற்படுத்தியதை கண்டோம்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நிதியுதவியுடன் சர்வ நாசசக்திஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது அல்லவா? அதை பெற்ற பிறகு உக்ரைன் அவற்றை உண்மையில் என்ன செய்கிறது?

போர் ஆயுதங்கள் பற்றிய பல அம்சங்களை தீவிரமாக கண்காணித்து வரும் நிபுணர்கள் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிக்கையில் ‘அமெரிக்கா, நேட்டோ அனுப்பிய ஆயுதங்கள் ரகசிய வலை தளங்களில் விற்கப்படுவதாகவும் இறுதியில் பயங்கரவாதிகள் கையில் குறைந்த விலையில் சென்றடைவதாகவும் கூறியுள்ளார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம், இந்த ஆண்டில் உக்ரைனுக்கு டாலர் 50 பில்லியனுக்கும் மேலே நிதி உதவியை பகிரங்கமாகவே தந்துள்ளது. செப்டம்பர் 6–ம் தேதி அமெரிக்க தூதர் கியேவ் கையொப்பமிடப்பட்ட ஒன்பது பக்க ஆவணம் சுட்டிக்காட்டுவது என்ன தெரியுமா? உக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையேயான போரில் நம்பகதன்மை கொண்ட போர் தகவல்கள் ஏதும் கைக்கு வராத நிலையில் உக்ரைன் தரும் தகவல்களை மட்டுமே நாம் நம்பி கொண்டு இருக்கிறோம் என பகிரங்க குற்றச் சாட்டை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம் போர்க்களத்தில் இல்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது. துப்பாக்கி கலாச்சாரம் என்ன சேதத்தை கட்டவிழ்த்துவிடும் என்று அமெரிக்கருக்கு தெரிந்ததுதான், மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பல ராணுவ ஆயுதங்கள் உக்ரைனுக்கு சென்ற பிறகு, அதை வட ஆப்பரிக்க நாடுகளுக்கு மிக மிக குறைந்த விலையில் விற்கப்பட ஆரம்பிட்டு விட்டதாம்.

ஜாவெலின் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் ரெயில் மூலம் அனுப்பப்பட்ட எஸ்-300 பாதுகாப்பு அரண் உட்பட பல ராணுவ தளவாடங்களை கண்காணிப்பது கடினம்.

ஜாவெலின்கள் வரிசை எண்களைக் கொண்டிருந்தாலும் அவற்றின் பரிமாற்றம் மற்றும் நிகழ்நேரத்தில் பயன்படுத்துவதைக் கண்காணிக்க சிறிய வழிகள் உள்ளன என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஆதாரங்கள் கூறுகின்றன. பல ராணுவ தளவாடங்களை கண்காணிப்பது மிக கடினமாகும்.அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எதிர்பார்க்கும் ஆபத்து என்னவென்றால் தீவிரவாதிகளுக்கு செல்வது தான்!

ஒரு நாள் போர் முடிவடையும் போது அல்லது நீண்ட காலத்திற்கு என மாறும் நிலை வந்தாலும் இந்த கொடிய ஆயுதங்ஙகள் யார் கையில் இருக்கும்?


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *