நியூயார்க், மார்ச் 21–
உக்ரைனில் இருந்து இதுவரை ஒரு கோடி பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐநா அகதிகள் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. அகதிகள் பிரிவு இயக்குனர் பிளிப்போ கிராண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் மற்றும் உக்ரைன் நாட்டிற்குள் குடியேறியவர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இதுவரை ஒரு கோடி பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனின் லூஹான்ஸ்க் பகுதியில் உள்ள முதியோர் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, அந்நாட்டில் மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகள் மோசமடைந்து வருவதையே காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.