செய்திகள்

உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 தமிழகம் மாணவர்கள் மீட்பு

திருச்சி சிவா எம்.பி. தகவல்

புதுடெல்லி, மார்ச்.11-

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்பதற்காக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த 6 மாணவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர். அப்போது தங்களை மீட்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், “உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 மாணவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். 366 பேர் அரசின் துணையின்றி தங்களது சொந்த செலவிலேயே வந்து விட்டனர். 34 மாணவர்களுக்கு ஊருக்கு வர விருப்பம் இல்லை. நாளை (இன்று) 3 விமானங்கள் வருகின்றன. அதில் தமிழக மாணவர்கள் 57 பேர் வர இருக்கிறார்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.