வர்த்தகம்

உகாண்டாவில் தமிழ் தொழிலதிபர்கள் தொழில் துவங்க சலுகை திட்டங்கள்

சென்னை, ஆக.14–

உகாண்டா நாடு தமிழ்நாட்டில்‌ இருதரப்பு வர்த்தகம்‌ மற்றும்‌ முதலீட்டை உருவாக்க ஆர்வமாக உள்ளது. இது விவசாயம்‌, ஐடி தொழில்‌, ஓட்டல்‌ மற்றும் விருந்தோம்பல்‌, சுகாதாரம்‌, கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுரங்கம்‌, எண்ணெய்‌ மற்றும்‌ எரிவாயு போன்ற பல துறைகளில்‌ பல பில்லியன்‌ டாலர்‌ வாய்ப்பை வழங்குகிறது.

உகாண்டாவின்‌ வளர்ச்சிக்கு தமிழகத்தின்‌ பங்காக இது அமையும்‌ என்று உகாண்டாவின்‌ ஹை கமிஷனர்‌ கிரேஸ்‌ அகெல்லோ, உகாண்டாவின்‌ உயர்‌ ஆணையர்‌ மதுசூதன்‌ அகர்வால்‌ மற்றும்‌ சென்னையில்‌ உயர்‌ ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வினோத்‌ சரோகி ஆகியோர்‌ தெரிவித்தனர்.

முதலீடு மற்றும்‌ வணிக வாய்ப்புக்கான சந்திப்பு நடைபெற்றது.

உகாண்டா மிகவும்‌ தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தைக்‌ கொண்டுள்ளது. மற்றும்‌ வெளிநாட்டு முதலீடுகளுக்கு சிவப்பு கம்பளம்‌ விரித்து வரவேற்கிறது.

உகாண்டா முதலீட்டாளர்களுக்காக அவர்கள்‌ நாட்டிலிருந்து உகாண்டாவுக்கான பண பரிவர்த்தனையின்‌ இலவச இயக்கத்தை வழங்குகிறது. கட்டாய வரிகளை செலுத்திய பிறகு லாபத்தை முழுமையாக தாய்‌ நாட்டிற்கு எடுத்துச்‌ செல்ல உகாண்டா அனுமதிக்கிறது. உகாண்டா தனியார்‌ முதலீட்டின்‌ 100% வெளிநாட்டு உரிமையை அனுமதிக்கிறது.

அரசு ஊக்கத்தொகை மற்றும்‌ வரி விதிமுறைகள்‌ அவ்வப்போது கிடைக்கும்‌ வெளிநாட்டு முதலீடுகளுக்கும்‌ பொருந்தும்‌.

தொழில்துறை மண்டலத்திற்கான ஊக்கத்தொகையாக 10 வருட கார்ப்பரேஷன்‌ வரி விதிமுறை உள்ளது. மூலப்பொருட்கள்‌, ஆலை மற்றும்‌ இயந்திரங்கள்‌ மீதான வரி விலக்கு, ஏற்றுமதி செய்யப்படும்‌ பொருட்களுக்கு ஏற்றுமதி வரி இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 100 ஆண்டுகளாக குஜராத்‌ மாநிலம்‌ மற்றும்‌ பிற மாநிலங்களைச்‌ சேர்ந்த இந்திய வணிகர்கள்‌ உகாண்டாவில்‌ பல்வேறு வணிகங்களை நிறுவியுள்ளனர்‌. மற்றும்‌ அவர்கள்‌ பெரிய வணிகக்‌ கூட்டமைப்பாகவும்‌ வளர்ந்துள்ளனர்‌. உகாண்டாவில்‌ பல்வேறு வணிக நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டுள்ள இந்திய மக்கள்‌ தொகை 60 ஆயிரத்துக்கும்‌ அதிகமாக உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில்‌ உகாண்டா மிகவும்‌ ஈர்ப்புள்ள இடமாகும்‌.

உகாண்டாவின்‌ அதிபரான யோவேரி ககுடா முசெவெரி, தம் நாட்டின்‌ சிறந்த பொருளாதாரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாட்டின்‌ தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உகாண்டாவில்‌ தொழில் துவங்க ஒற்றை சாளர அனுமதி பெறுவார் என்று சென்னை கவுரவ உயர் ஆணையர் வினோத் சாரகி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *