செய்திகள்

ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் 464 மாணவர்களுக்கு பட்டங்கள்

கோவை, ஏப்.15

கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 7வது பட்டமளிப்பு விழாவில், 464 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் 7வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரி தலைவர் ரா.மோகன்ராம் தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி இயக்குநர் ரா.ராஜாராம் மற்றும் கல்லூரி முதல்வர் சுதா மோகன்ராம் ஆகியோர் வரவேற்று பேசினர்.

விழாவில், சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி, பட்டம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார்.

மாணவர்களின் கல்வித் தரம் 

துணைவேந்தர் சூரப்பா பேசும்போது,

மாணவர்கள் வெற்றி பெற அண்ணா பல்கலைகழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் இணைந்து திறம்பட செயலாற்றி வருகிறது. இதனால் மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளது. இன்றைய காலத்தில் மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்று, வேலைவாய்ப்புகளை பெற்றிட, அனைத்து முயற்சிகளுக்கும் அண்ணா பல்கலைகழகம் உறுதுணையாக இருந்து வருகிறது. இந்தியாவில் சிறந்த பல்கலைகழகமாக அண்ணா பல்கலைகழகம் விளங்கி வர காரணமே, மாணவர்களின் கல்வி தரமே என்று பேசினார்.

விழாவில், இசிஇ, சிவில், சிஎஸ்இ, மெக், இஇஇ ஆகிய பாடப்பிரிவில் இளங்கலை படிப்பில் 447 மாணவ, மாணவியர்களுக்கும், முதுகலையில் 17 மாணவ, மாணவிகளுக்கும், மொத்தம் 464 மாணவர்களுக்கு பட்டங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் பல்கலைகழக தரவரிசைப் பட்டியலில் 19 மாணவ, மாணவியர் தங்கப்பத்தகம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து முதல்வர் சுதா மோகன்ராம், மாணவர்களுக்கு உறுதிமொழியினை வாசிக்க, மாணவர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் துறைத்தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *