வாழ்வியல்

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு!

Spread the love

இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் விளை பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகளுக்கு, புவிசார் குறியீடு பதிவகம், புவிசார் குறியீடு வழங்கி வருகின்றது. விருப்பாட்சி வாழைப்பழம், நீலகிரி தேயிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, நெல்லை அல்வா என, பல பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஈரோடு மஞ்சளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மஞ்சளின் தனித்தன்மை, மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி, தரம், நிறம், போன்றவை, பிற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு இருப்பதில்லை. 2011ம் ஆண்டு, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் விண்ணப்பித்தனர். இதற்கு ஆதரவான பல ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். ஆட்சேபணை ஏதும் வரவில்லை. எனவே ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மட்டும், இந்த புவிசார் குறியீட்டை பயன்படுத்த முடியும்.

இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலம் வைகான் மஞ்சள் ரகம், ஒடிசாவில் கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மண்ணின் தரம் முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஈரோடு, கோவை, காங்கேயம், அன்னூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மட்டுமே, ‘‘ஈரோடு மஞ்சள்’’ என்ற பெயரைப் பயன்படுத்த இயலும்.

இதர பகுதியில், இந்த மஞ்சளை வாங்கிச் சென்று தங்கள் நிலத்தில் விளைவித்தாலும் ‘ஈரோடு மஞ்சளாக’ கருத முடியாது. மண்ணை அடிப்படையாகக் கொண்டு, இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மஞ்சள் இனி உலகளவில் அறியப்படும் பெருமை பெறுகிறது. கூடுதல் விலை கிடைக்கும். தேவையும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *