சென்னை, பிப்.8–
இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 24–ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர்கள், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கை சினத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 24–ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 19–ந்தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் தி.மு.க. அறிவித்துள்ளது.