செய்திகள்

ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் பூஜை பொருட்கள் கண்காட்சி, விற்பனை

Spread the love

ஈரோடு, ஜூலை 10–

ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், பூஜை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவங்கியது.

இது பற்றி, ஈரோடு பூம்புகார் மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:–

இக்கண்காட்சியில், ஐம்பொன் சிற்பம், பித்தளை விளக்கு, பூஜை பொருட்கள், தஞ்சை ஓவியங்கள், தஞ்சை கலைத்தட்டு, சந்தன மரச்சிற்பம், கற்சிற்பம், வெள்ளை மற்றும் கருப்பு உலோகத்தால் ஆன சிற்பம், வலம்புரி சங்கு, ருத்ராட்சம், வாஸ்து உருளி, குபேர விளக்கு, நவரத்தின கற்கள், முத்து நகைகள் உட்பட ஏராளமான பூஜை பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.

தஞ்சை, கும்பகோணம், மதுரை, வாகைக்குளம் போன்ற இடங்களில் உள்ள பூம்புகார் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், பிற மாநில கைவினை பொருள் உற்பத்தியாளர்களிடம் இருந்தும் வாங்கி வரப்பெற்றுள்ள பொருட்கள், ரூ.50 முதல், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பில், பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. இங்கு கடன் அட்டை மூலமாகவும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். சேவை கட்டணம் இல்லை. இக்கண்காட்சி மூலம் ரூ. 3 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *