செய்திகள் நாடும் நடப்பும்

ஈரான் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Makkal Kural Official

நியூயார்க், அக். 26

ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் ஓராண்டு கால போரில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு விருந்தினராக வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவரை, ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் நாடும் அண்மையில் இஸ்ரேல் மீது டிரோன் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ராணுவத்தை போருக்கு தயாராக இருக்கும்படி அல் கோமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானை இஸ்ரேல் தாக்கி வரும் நிலையில், ஈரானில் உள்ள அணு உலைகளை தாக்கிவிடும் அபாயம் உள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, எக்காரணம் கொண்டும் ஈரானில் உள்ள அணு உலைகளில் தாக்குதல் நடத்திவிட வேண்டாம் என கூறியுள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *