ஆர். முத்துக்குமார்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜான் அருகே விபத்துக்குள்ளானதால் அவர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய உலகத் தலைவர்கள், ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது பரிவாரங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ரைசியின் மரணம் இந்தியாவுக்கும் பேர் இழப்பாகும். காரணம் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, இந்தியாவுடனான ஈரானின் உறவுகள் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேம்பட்டது.
குறிப்பாக வர்த்தகம், உள்கட்டமைப்பு மற்றும் ராணுவ பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் மேம்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்கை ரைசி ஆதரித்தார்,
குறிப்பாக ஆப்கானில் சபஹர் துறைமுகத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் இந்தியாவை நுழைய வழிவகுத்ததும் அவரது முயற்சிகள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அதற்காக பாக்கிஸ்தானின் அதிருப்தியையும் அமெரிக்காவின் கோபத்தையும் பெற்றனர்.
ஈரான்-இந்தியா உறவுகளில் கச்சா எண்ணை வர்த்தகம் மிக முக்கிய அங்கமாகும்.
ஈரானுடனான எரிசக்தி வர்த்தகத்தை நிலைநிறுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகளைத் தொடர்ந்து முயன்றது உலகளாவிய பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரானுக்கு முக்கியமான வருமானத்தை வழங்கும் அதே வேளையில் இந்தியாவிற்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான யுக்தியாக இருந்தது.
அமரிக்காவின் கெடுபிடியால் உலக நாடுகள் ஈரானுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகளை சந்தித்துக் கொண்டு இருந்தாலும் இந்தியாவுடனான கச்சா எண்ணை வர்த்தகத்தால் தங்கள் நாட்டு பொருளாதரம் முறிந்துவிடாது நிமிர்ந்து நடைபோட முடிந்தது என்று ஈரான் பெருமிதம் கொண்டிருந்தது.
மொத்ததில் இப்ராஹிம் ரைசியின் ஜனாதிபதி பதவி காலகட்டத்தில் இந்தியாவுக்கு பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார அம்சங்களில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதையும் பன்முகப்படுத்துவதையும் உறுதிபடுத்தியது.
ஈரானின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசியின் ஆட்சிக்காலத்தில் ரஷ்ய தலைவர்களுடன் குறிப்பாக ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் உறவுகளை வலுப்படுத்தியது. இந்த உறவு உலக அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிகளுக்கும் உரமாக அமைந்து இருந்தது.
ஆக, இது உண்மையில் விபத்தா? அல்லது இப்பகுதியில் அமைதியை உருக்குலைக்க தீவிரவாதிகளின் நடத்திய சதியா? என்ற விவாதம் துவங்கிவிடும்.
இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாபத்திய அரசியல் சதி உள்ளதா என்பது பற்றிய குற்றச்சாட்டுகளையும் பார்க்கத்தான் போகிறோம்!