செய்திகள்

ஈரானைத் தொடர்ந்து சிரியா, ஈராக் மீதும் இஸ்ரேல் தாக்குதல்

Makkal Kural Official

டெல்அவிவ், அக். 26–

ஈரானை தாக்கியதுடன் சிரியா மற்றும் ஈராக்கையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். பஞ்சம், நோயினால் மறுபக்கம் உயிர் சேதம் நிகழ்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பையும் எதிர்த்து இஸ்ரேல், லெபனான் மற்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் பெரிய நாடு என்பதால் வலுவான ஆயுதங்களைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்துகிறது.

ஆனால், லெபனான் அதிகமான விளைவுகளை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில், தற்போது ஈரான் மீது மட்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை. சிரியா மற்றும் ஈராக் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் புறநகர் நகரில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிரியா தனது வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் அதனை தடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈராக், சிரியா மீதும் தாக்குதல்

அதேபோல் ஈராக் மீதும் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. தெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ராவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பாஸ்ரா என்பது ஷியா கிளர்ச்சியாளர்களின் தளமாக உள்ளது. சம்பந்தமே இல்லாமல், இஸ்ரேல் இந்த நாடுகளை தாக்கியிருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கும் காரணங்கள் உள்ளது.

அதாவது ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இடையே நல்ல உறவு என்பதே இல்லை. இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஈராக் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரானுடன் மோதுவதால் ஈராக்கும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் இஸ்ரேல் அந்த நாட்டை குறிவைத்துள்ளது. அதேபோல் சிரியாவில் பல இடங்களில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சிரியாவையும் இஸ்ரேல் குறிவைத்து தாக்கி உள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *