செய்திகள்

ஈக்விடாஸ் வங்கி காவலர்களுக்கு நிழல் குடை சப்ளை

சென்னை, ஏப். 25–

இந்தியாவின் மிகப்பெரிய சிறு நிதி வங்கியான ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கோவிட்- –19 தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனுக்காக முழு முடக்கத்தின் போது களப்பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு நிழல் குடைகளை வழங்கி உள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு மளிகை சாமான்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை அவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *