செய்திகள்

இ – பாஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

காஞ்சிபுரம், ஜூன் 30–

மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் தங்க இ – பாஸ் கிடைக்காத விரக்தியில் காஞ்சிபுரத்தில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷவரன் (வயது 28). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த ரோஜா (வயது 26) என்பவரைத் திருமணம் செய்து கொண்டு காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மனைவி மகப்பேறுக்காக சென்னை சென்ற நிலையில் இன்னும் ஓரிரு நாளில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதால், தற்போதுள்ள ஊரடங்கால் சென்னை செல்ல இ–-பாஸ் பதிவு செய்தும் தொடர்ந்து அனுமதி‌ கிடைக்காமல் மறுக்கப்பட்டதால் விக்னேஷவரன் விரக்தியடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சிவகாஞ்சி காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *