செய்திகள்

இ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்

சென்னை, ஆக.8–

இ.ஐ.டி. பாரி இந்தியா நிறுவனம், நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 4 ஆயிரத்து 142 கோடி வர்த்தகம் புரிந்து ரூ. 29 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய சர்க்கரை தயாரிப்பு நிறுவனமாக இ.ஐ.டி. பாரி திகழ்கிறது.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள் உற்பத்தி காரணமாக இது தொடர்ந்து செயல்பட்டது. புதியதாக ‘ஹேண்ட் கிளீன்’ ஸ்டெரி சேப் என்ற சானிடைசர்களை அறிமுகம் செய்தது என்று இதன் நிர்வாக இயக்குனர் எஸ்.சுரேஷ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *