காசா, ஆக. 24–
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு, காசாவிலிருந்து 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7 ந்தேதி போர் மூண்டது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்தது. குறிப்பாக காசா பகுதியில் உள்ள மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை காசா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 40,265-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
90% பேர் புலப்பெயர்வு
இந்நிலையில், காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 90 சதவீதம் பொதுமக்கள் தாங்கள் வசித்துவந்த பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது தவிர, நோய்த் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்த முடியாததால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அங்கு ஒரு குழந்தைக்கு போலியோ முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.