செய்திகள்

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, அக்.8-–

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து அயலக தமிழக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–-

இஸ்ரேலில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த 15 நபர்கள் அயலக தமிழர் நலத்துறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். 15 நபர்களும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணி செய்து வருகின்றனர். இஸ்ரேலில் தமிழகத்தை சேர்ந்த 15 நபர்களும் பாதுகாப்பாக இருந்தாலும், போர் தீவிரமடைவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அயலக தமிழர் நலத்துறையினரை தொடர்பு கொண்டால் இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 8760248625, 9940256444, 9600023645 ஆகிய தொலைபேசி எண்களிலும், nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *