காசா, ஜன. 26–
இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இன்னும் 91 பிணைக் கைதிகள் ஹமாஸ் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன விடுதலைக்கு எதிராக உள்ள இஸ்ரேலின் ஆக்ரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக, ஹமாஸ் போராடி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் சிலரை சிறைபிடித்துச் சென்றனர். ஓராண்டுக்கும் மேலாக நடந்த போர் அண்மையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, 3 பெண்களை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
பெண் ராணுவத்தினர் விடுதலை
இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளது. பதிலுக்கு தங்கள் வசம் இருக்கும் 33 இஸ்ரேலியர்களை அனுப்பி வைப்பதாகவும் அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தங்கள் வசம் இருக்கும் பிணைக் கைதிகளில் 4 இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.