சிறுகதை

இவ்வளவு தான் மனிதன்… | ராஜா செல்லமுத்து

தேவைகள் தீர்ந்த பிறகு தேவையற்றவனாகிவிடுகிறான்… நண்பன்

முத்து நீங்க ஆரம்பிக்கிற கம்பெனியில ஆள் தேவையிருக்கா? என்று ஆவலோடு கேட்டான் பிரகாஷ் . அதுக்கென்னங்க நீங்க சொன்னா சேத்துக்கிர வேண்டியது தான்.

உங்களுக்கு ஏதும் சிரமம் இல்லையே?

நீங்க இப்படி பேசுறது தான் சிரமம் பிரகாஷ்.

ஸாரி அதுக்கென்னங்க உங்களுக்காகவே ஒரு போஸ்ட் உருவாக்கிறோம் என்று உரிமையோடு சொன்னான் முத்து

முத்து…. முத்து…. என்று பிரகாஷ் பேசும் போதே அதில் கெஞ்சும் தொனி தெரிந்தது.

பிரகாஷ் நீங்க என்னோட நண்பர் . உங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன். வேலையக் கூட உங்களுக்காக ஏற்பாடு பண்ண மாட்டனா என்ன? என்று முத்து சொல்ல அன்றே பிரகாஷ் தன் நண்பர்களான ரவியையும் முருகேசனையும் அழைத்து வந்தான்.

முத்து இவங்க தான் என்னோட பிரண்ட்ஸ் ரெண்டு பேத்துக்குமே வேலை இல்ல. ரொம்ப கஷ்டப்படுறாங்க ;ஒரு வேலை ஏற்பாடு பண்ணிக்குடுத்தீங்கன்னா அவங்களோட வாழ்க்கைக்கு ஒரு வடிகாலா இருக்கும்னு நினைக்கிறேன். அடடா இதுயென்ன ஒரே புலம்பல். ஒரு நண்பனுக்காக இதக்கூடச் செய்ய மாட்டனா என்ன? என்று முத்து சொல்லும் போது பிரகாஷ் தலையைச் சொறிந்து கொண்டே நின்றான்.

என்ன பிரகாஷ் ஒரு மாதிரியா இருக்கீங்க?

ஒண்ணுல்ல முத்து உங்களுக்கும் ஒரு வேல போட்டுருக்கேன். ஒரு நண்பனோட கஷ்டம் நண்பனுக்குத்தான தெரியும். இதக்கூட செய்யமாட்டனா என்ன? என்று முத்து சொன்ன போது பிரகாஷ் அழுதே விட்டான்.

ஐயய்யோ என்ன பிராகஷ் இதுக்கு போயி இப்பிடி? இல்ல முத்து நான் ஒரு ஆளுக்கு தான் வேலை கேட்டேன். ஆனா நீங்க என்னடான்னா ரெண்டு பேருக்கும் வேலை போட்டு குடுத்ததுமில்லாம எனக்கும் சேத்து வேல குடுத்திருக்கீங்க. நீங்க உண்மையிலயே நண்பன் இல்லீங்க. மனுச உருவத்தில இருக்கிற கடவுள் என்று பிரகாஷ் சொல்லும் போது…

‘‘நீங்க என்ன பிரகாஷ் இப்படி பேசுறீங்க? இது என்னோட கடமை. ஒரு நண்பன் கஷ்டப்பட்டு இருக்கும் போது அத பாத்திட்டு இருக்கிறவன் அரக்கன். நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் என்று கூனிக் குறுகி நின்ற பிரகாஷை தோள் தட்டி உற்சாகப் படுத்தினான் முத்து.

சரி நாளைக்கு இருந்து பிரண்ட்ஸ் எல்லாம் வேலைக்கு வரச் சொல்லுங்க என்ற உத்ரவாத உத்தரவைக் கொடுத்தான் முத்து.

பிரகாஷ்க்கும் வேல கொடுத்து அவனின் நண்பர்களுக்கும் வேலையைக் கொடுத்தான். அந்த மாதம் வந்தது. பிரகாஷ் எதிர்பார்க்காத அளவுக்கு மேல ஒரு தொகையைச் சம்பளமாகக் கொடுத்தான் முத்து

இவ்வளவு பணம் சம்பளமா குடுக்கிறீங்க? எல்லாம் உங்களுக்கு தான் என்ற முத்துவின் காலில் விழாத குறையாக மன்றாடினான் பிரகாஷ்

முத்து… இந்த உதவிய நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன் முத்து என்ற பிரகாஷ் தன் சம்பளத்தை வாங்கிக் கொண்டும் நண்பர்களின் வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைத்த முத்துவை நினைத்துப் பெருமைப்பட்டான்.

மாதங்கள் கடந்தன. முத்துவின் தயவால் மூன்று குடும்பங்களும் முன்னேறின.

சம்பள மாதங்கள் சம்பளத்தோட உருண்டோடின. முத்துவின் கம்பெனி நொடித்துப் போனது. வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் பணமில்லையென்று தெரிந்ததும் இடத்தைக் காலி செய்து விட்டு ஓடினார்.

கால வெள்ளம் கடந்து போய் பிரகாஷ் ஒரு கம்பெனியின் அதிபர் ஆனான் . இது முத்துவிற்கு ஒரு நண்பனின் மூலமே தெரிந்தது.

என்ன சொல்றீங்க?

ஆமா… முத்து

எனக்கு தெரியவே தெரியாது ரமேஷ் .நீங்க சொல்லித்தான் பிரகாஷ் கம்பெனி ஆரம்பிச்சது தெரியும். நல்லா இருக்கட்டும் . முத்து நீங்க பிரகாஷ பாப்பீங்களா?

இல்ல

ஏன்? வேணாம் நான் வரல .

சரி உங்களுக்காக இல்லைன்னாலும் எனக்காகவாவது வாங்களேன் என்ற ரமேஷின் பேச்சுக்கு முத்து வால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

ஒரு நாள் பிரகாஷின் அலுவலகம் சென்றார்கள்.

முத்துவையும் ரமேஷையும் ஒருசேரப் பார்த்தவனுக்கு பகீரென்றது

வாங்க…. வாங்க…. உதட்டில் ஒட்டாத வார்த்தைகளால் வரவேற்றான் பிரகாஷ்

உட்காருங்க முத்து இருக்கட்டும் இருக்கட்டும் ..

பிரகாஷ்…

சொல்லுங்க என்ற பிரகாஷின் வார்த்தையில் ஈரமில்லாமல் இருந்தது. ஒண்ணுல்ல பிரகாஷ் என்னோட பிரண்ட் வேலையில்லாம இருக்கான்.

ம் அதுக்கு?

என்று இழுத்தான் முடிஞ்சா இருவருக்கு வேலை குடுங்க தலையை மட்டுமே ஆட்டினான் பிரகாஷ் என்று முத்து கூப்பிட்டாலும் அவன் உள்ளம் அவமானத்தில் குறிகியது.

என்ன முத்து சொல்லுங்க

வேலை இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்கு பிரகாஷ் . ஏதாவது எனக்கு வேலை கெடைக்குமா? என்று வாய்விட்டுக் கேட்ட போது உடனே பதில் சொன்னான்.

பிரகாஷ் இல்ல முத்து கம்பெனியில போதுமான ஆள் இருக்காங்க நான் சொல்றனே என்றான் பிரகாஷ்

அவன் அப்பிடிச் சொன்ன போது முத்துவின் இதயம் ஆயிரம் துண்டுகளாய் உடைந்து சிதறின். அட மனுசன்க இவ்வளவு தான் என்று சொன்னது முத்துவின் மனசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *