சினிமா செய்திகள்

இளையராஜாவுக்கு தனி விழா எடுக்கிறார் நடிகர் பார்த்திபன்

சென்னை, பிப் 4–

இசைஞானி இளையராஜாவுக்கு விரைவில் நான் ஒரு தனி விழா எடுக்கப் போகிறேன் என்று பிரபல நடிகர் – டைரக்டரான ஆர். பார்த்திபன் அறிவித்துள்ளார்.

‘ராஜா சாரை அதிகம் நேசித்தவர்கள் பெருங்கூட்டமாக அங்கு (நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்) இசைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மிகவும் அதிகமாக நேசிக்கும் நான் தனிமையில் அசை போட்டுக்கொண்டிருந்தேன். அவர் மீதான பிரியங்களையும், நிகழ்விலிருந்து பிரிய நேர்ந்த சம்பவங்களையும். விரைவில் அவரை வைத்து ஒரு இசைச் சம்பவம் நடத்த உள்ளேன்’ என்று ஆர்.பார்த்திபன் தன் பேஸ்புக்கில் (முகநூல்) பதிவு செய்திருக்கிறார்.

தமிழ்ப்பட அதிபர்கள் சங்கத்தின் தலைவர் விஷாலும் – நிர்வாகிகளும் இளையராஜா – 75 என்ற பெயரில் 2 நாள் பிரம்மாண்ட கலை விழாழவை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்றும் அதற்கு முன் தினமும் நடத்தியது நினைவிருக்கலாம். விழாவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை வழியனுப்பி வைத்தவர் பார்த்திபன். அப்படியிருக்கும் நிலையில் விழா நாளில் தனது துணைத்தலைவர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தன் முகநூலில் தன் உணர்வுகளை இப்போது பதிவு செய்து, விரைவில் இசைஞானிக்கு தனி விழா தான் நடத்தப் போவதாக கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *