வாழ்வியல்

இளைஞர், மாணவர்கள், தொழில் முனைவோர் ஆரோக்கியம் முக்கியம்!

நல்ல உணவு, காற்று, பழக்க வழக்கங்கள் குறைந்துவிட்டன. நஞ்சு நிறைந்த உணவு, தூசி கலந்த காற்று, உடம்மைக் கெடுக்கும் பல தவறான பழக்கவழக்கம் இவற்றால், மக்களின் உடல் நலம் கெடுகிறது.

குடி, வாகன கண்ணிக்கை அதிகரிப்பு, பயிற்சியின்மையால், அகல ரோடுகளில் அதிவேகமாக ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகமாகிவிட்டன. எனவே பல லட்சம் பேர் விபத்தில் இறக்கின்றனர்.

ஆண்டுக்கு 4 லட்சம் பேர் ஊனமுற்றவராகின்றனர். பெரியோர் முதல் சிறியவர் வரை, எந்நேரமும் அலைபேசியில் பேசிக் கொண்டும், டிவி பார்த்துக் கொண்டும் சமூக வலைதளங்களில் மூழ்கி, உழைக்க மறுக்கின்றனர்.

இந்த அவல நிலை மாற அனைவரும் ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

* முழு உடல் பரிசோதனை செய்யுங்கள்.

* வீடுகளில் மரங்கள், செடிகள் வளருங்கள்.

* தினம் 5 கி.மீ. காலையில் நடைப் பயிற்சி செய்யுங்கள்.

* மது, குடி, புகை, புகையிலை, பாக்கு பழக்கம் விட்டொழியுங்கள்.

* குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.

* இயற்கை உணவு, தானியம், கீரைகள் உண்ணப் பழங்குங்கள்.

* உப்பு, இனிப்பு, அதிக காரம் குறையுங்கள்.

* வீட்டிலிருக்கும் போது கம்ப்யூட்டர், அலைபேசியை ஒதுக்கி, மனம் விட்டு பேசுங்கள்.

* மண்பானை சமையல் சாப்பிடுங்கள்

* தினம் நடை, யோகா, மூச்சுப் பயிற்சி, அதிக தண்ணீர் குடித்தல், இரு வேளை குளிப்பது என நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்.

* வாரம் ஒரு நாள் உணவு உண்ணா நிலை அல்லது நீர் ஆகாரம் மட்டும் சாப்பிடுங்கள்.

இத்தகைய பழக்கங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *