செய்திகள்

இளைஞர்கள் ‘பாஸ்ட்புட்’ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று எரிச்சல்: உடனே குணப்படுத்த ‘டைஜின்’ மருந்து, மாத்திரை ‘அபாட்’ நிறுவனம் அறிமுகம்

சென்னை, ஏப். 20

நகர்ப்புற வாழ்க்கை அழுத்தங்களின் காரணத்தால், இளைஞர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக தவறான ‘பாஸ்ட்புட்’ உணவுகளை உண்பதாகவும், தவறான காலங்களில் உண்ணும் பழக்கங்களை கொண்டிருப்பதாகவும் மற்றும் மன அழுத்தம், பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இவர்கள் உணவில் அமிலம் அதிகரிப்பதால் வயிறு எரிச்சல் ஏற்படுகிறது. இத்தகைய நோயாளிகளில் 70 சதவீதம் பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

பெருகிவரும் வயிறு எரிச்சல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ‘டைஜின்’ மிகவும் உகந்ததாகும். இது 90 ஆண்டுகளாக இந்தியாவில் கிடைக்கிறது. இது இந்திய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. வயிறு எரிச்சலை போக்கும் மருந்து டைஜினில் அதிக அமில நடுநிலைப்படுத்தும் திறன் உள்ளதால், ஒருவரின் வயிற்றில் உள்ள அமிலத்தை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது என்று அபாட்ஸ் மருத்துவ விவகாரங்கள் பிரிவின் இயக்குனர் ரூபா தாஸ் தெரிவித்தார்.

டைஜின் மருந்து திரவம், பவுடர் மற்றும் மாத்திரை என மூன்று வடிவங்களில் இந்தியாவில் கிடைக்கக்கூடிய ஒரே ஆன்டாசிட் மருந்து இது ஆகும். வீட்டிலிருக்கும்போதும் சரி மற்றும் வெளியிடங்களுக்குப் பயணிக்கும்போதும் சரி உட்கொள்வதற்கு இது மிக எளிதானது என்று விளம்பர பிரச்சாரம் செய்யும் நடிகை டாப்சி தெரிவித்தார்.

அபாட் இந்தியா நிர்வாக இயக்குனர் அம்பட்டி வேணு, இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் டைஜின், வயிற்று எரிச்சலை நீக்கி அமிலத் தன்மை இல்லாமல் செய்கிற திறமை கொண்டுள்ளது என்றார்.

இது பற்றி அறிய www.abbott.com வலைதளத்தில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *