இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தகவல்
சென்னை, டிச. 19–
20 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மன அழுத்தமே காரணம் என இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையின் இருதய நிபுணர்கள் குழு, புதிய தொழில்நுட்பத்தால் இருதய சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்ததுடன் முன்பெல்லாம் 60 வயது மதிக்கத்தக்க நபர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு என்பது தற்போது 20 வயதிலேயே ஏற்படுகிறது எனக் கூறினர்.
மன அழுத்தமே காரணம்
புகைப்பிடிப்பவர்களுக்கு தான் முதலில் மாரடைப்பு ஏற்பட்டது எனவும் ஆனால், தற்போது மன அழுத்தமே மாரடைப்புக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டனர். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பதாலும் மாரடைப்பு ஏற்படுவதாக கூறிய மருத்துவர்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகள் மூலம் மாரடைப்பை தவிர்க்கலாம் என அறிவுறுத்தினர்.