வாழ்வியல்

இளம் சிவப்புக் கண் நோய் குணப்படுத்துவது எப்படி?

இளம் சிவப்புக் கண்ணோய் பெரும்பாலும் வைரசினால் உண்டாகிறது. பக்டீரியா தொற்றியினால் அல்லது ஒரு ஒவ்வாமை செயல்பாட்டினால் உண்டாகலாம்.

இளம் சிவப்புக் கண் நோய் என்பது கண்ணின் வெள்ளைப் பகுதியை (ஸ்க்ளீரா) மூடியிருக்கும் மெல்லிய சவ்வில் (கண்ஜங்டிவா) ஏற்படும் வீக்கம் ஆகும். இந்தச் சவ்வு இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறும்.

இளம் சிவப்புக் கண் நோய் கண்ஜங்டிவிற்றிஸ் என்றும் அழைக்கப்படும்.இளம் சிவப்புக் கண் நோயின் அடையாளங்களும் அறிகுறிகளும் வருமாறு:–

கண் மற்றும் கண் இமையின் உட்பகுதி சிவந்திருத்தல், இலேசாக கண்ணிமைகள் வீங்கியிருத்தல், கண்களில் அரிப்பு , கண்களிலிருந்து தெளிவான அல்லது மஞ்சள்-பச்சை கலந்த நிறத்தில் நீர் வெளியேறுதல் ஆகியவை சிவப்புக் கண் நோயின் அடையாளங்கள்.

வைரல் இளம் சிவப்புக் கண் நோய் வழக்கமாக இரண்டு கண்களையும் பாதிக்கும். உங்கள் பிள்ளைக்கு வேறு தடிமல் அறிகுறிகளும் இருக்கலாம். உங்கள் பிள்ளை நித்திரையிலிருந்து எழுந்திருக்கும்போது அவனது கண்கள் ஒட்டும் தன்மையுடையதாக இருக்கும். கண்ணிலிருந்து வெளியேறும் நீர் பெரும்பாலும் தெளிவானதாக இருக்கும்.

பக்டீரியாவினால் உண்டாகும் இளம் சிவப்புக் கண் நோய் பெரும்பாலும் முதலில் ஒரு கண்ணை மாத்திரம் பாதிக்கும். மஞ்சள் அல்லது பச்சை நிற நீர் வெளியேறுவதை நீங்கள் பார்க்கமுடியும். இந்த வெளியேறும் நீர் கண்ணிமைகளில் பொருக்கை ஏற்படுத்தும்.

உங்கள் பிள்ளைக்குச் சுற்றுச்சூழலிலுள்ள ஏதாவது பொருட்களுக்கு ஒவ்வாமை இருக்கும்போது இளம் சிவப்புக் கண் நோய் ஏற்படலாம். உங்கள் பிள்ளைக்கு ராக்வீட் மகரந்தம், புல், மர மகரந்த தூள்கள் மற்றும் மிருகங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வாமை இருக்கலாம். இது இரு கண்களையும் பாதிக்கும். கண்ணிலிருந்து நீர் வெளியேற்றம் சிறிதளவிலிருக்கலாம் அல்லது இல்லாமலுமிருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு கண்களில் அரிப்பு மற்றும் கண்களிலிருந்து நீர் வெளியேற்றம் இருக்கலாம்.

தொடு வில்லை (கான்டாக்ட் லென்ஸ்) அணியும் பதின்ம வயதினர் தொடு வில்லைகளை அகற்ற வேண்டும். ஒரு உடல்நல பராமரிப்பளிப்பவர் அல்லது கண் பராமரிப்பு நிபுணரை அணுகி, கண்களின் சிவப்பு நிறம் தொடுவில்லை அணிவதுடன் சம்பந்தப்பட்டதா என கண்டறியவேண்டும். உங்கள் பிள்ளையின் இளம் சிவப்புக் கண் நோய்க்கு எப்படி சிகிச்சையளிக்கலாம்

வைரஸ் இளம் சிவப்புக் கண் நோய் 1 முதல் 2 வாரங்களுக்கு நீடிக்கும். அதற்கு மருத்துவச் சிகிச்சை தேவையில்லை. அது தானாகவே நிவாரணமடைய வேண்டும். இல்லாவிட்டால் கண் மருத்துவரைப் பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *