வாழ்வியல்

இளம் சிவப்புக் கண் நோயைக் குணப்படுத்துவது எப்படி?

வைரஸ் மற்றும் பக்டீரியாவால் ஏற்படும் இளம் சிவப்புக் கண் நோய் மிகவும் தொற்றிக்கொள்ளும் தன்மையுடையது. அவை பின்வரும் வழிகளில் இலகுவாகப் பரவும்:

தொற்றுநோயுள்ள கண்களைத் தொட்டபின்னர் உங்கள் கண்களைத் தொடுதல், தலையணைகள், துவாய்கள், முகம் துடைக்கும் துணிகள், அழகு சாதனங்கள், அல்லது முக அலங்கரிப்பு பொருட்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம்

வைரஸ் மற்றும் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட விழிவெண்படல அழற்சியுடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது முகம் அல்லது கண்களைத் தொட்ட பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக கைகளை சோப் மற்றும் தண்ணீரினால் நன்றாகக் கழுவவும். அல்க்கஹோல் சேர்ந்த ஹான்ட் ரப்பை உபயோகிக்கவும்.

ஹான்ட் ரப் கண்ணுக்குள் செல்வதைத் தவிர்க்கவும்.கண்களைச் சுத்தப்படுத்துதல் கண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் அல்லது ஒட்டுந்தன்மை சூடான அழுத்தத்தினால் துடைக்கப்படும்போது சில பிள்ளைகள் சற்று நிவாரணமடைந்ததைப் போல உணருகிறார்கள்.

ஒரு சுத்தமான, சூடான, உலர்ந்த துவாய் அல்லது முகம் துடைக்கும் துணியினால் மென்மையாகத் துடைத்து கண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் அல்லது பொருக்கை அகற்றவும். ஒவ்வொரு துடைப்புக்கும் சுத்தகமான அழுத்தும் பகுதியை உபயோகிக்கவும். துடைப்பானை உடனே அகற்றிவிடவும் அல்லது சலவைக்குப் போடவும். இதைச் செய்தவுடன் உங்கள் கைகளைக் கழுவவும்.

நீங்கள் சேலைன் அல்லது மற்ற வலி குறைக்கும் கண் சொட்டு மருந்துகளால் கூட கண்ணைக் கழுவி அரிப்பைக் குறைக்கலாம். உங்கள் மருந்தாளுநரிடம் (ஃபார்மசிஸ்ட்) ஆலோசனை கேட்கவும்.

இளம் சிவப்புக் கண்நோய் எரிச்சலூட்டுவதாயிருக்கலாம். ஆனால் வழக்கமாக வலியற்றதாயிருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு வலி தீர்க்கும் மருந்து தேவைப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *