செய்திகள்

இளம்பெண் பலாத்காரம்: மத போதகர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி, அக். 14–

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சென்னையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2013-ம்ஆண்டு திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஆசிரியை தூத்துக்குடி புதுக்கோட்டை மங்களகிரி விலக்கில் உள்ள ஒரு தியான இல்லத்திற்கு சென்று போதகர் மைக் மகிலன் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மற்றொரு போதகரை இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த போதகர் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தான் தொழில் செய்ய வேண்டும் என்றும் அப்பெண்ணிடம் இருந்து தனது சகோதரர் மூலமாக ரூ 5 லட்சம் வரை பெற்றுள்ளார். இதற்கிடையே அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு அந்த போதகர் மறுத்துள்ளார். இதனால் அந்தபெண், போதகர் மகிலனிடம் முறையிட்டபோது அவரும், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 11-ந் தேதி நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருவரிடம் கேட்டபோது வெளியே அந்த பெண்னை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மதபோதகர் மைக் மகிலன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

அதன்பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, போதகர் மைக் மகிலன் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 417, 420, 506 (1) மற்றும் பெண்களை கொடுமைப்படுத்துதல் தடைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *