சென்னை, ஜூன் 17–-
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவதை விரும்பவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று தமிழ்நாடு சார்பில் நேற்றிரவு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-–
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கப்படுகிறது.
வி.செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.