செய்திகள்

இலவச அரிசி, காய்கறி கொடுக்க பெண்கள் கூட்டத்தை கூட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கு

Spread the love

புதுச்சேரி, மார்ச். 26 –

புதுச்சேரியில் இலவச அரிசி, காய்கறி கொடுக்க பெண்கள் கூட்டத்தை கூட்டிய

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜான்குமார் . அவரது வீடு நெல்லித்தோப்பு பகுதியில் உள்ளது. இன்று அவர் வீட்டின் அருகே பெண்கள் கூட்டமாக கூடியிருந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் ஒரு பையில் இலவச அரிசி, காய்கறிகள் போட்டு அவற்றை அந்த பெண்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். அதைப் பெறுவதற்காக பெண்கள் கூட்டம் அதிகமாக அங்கு கூடியிருந்தது. ஊரடங்கு பிறப்பித்திருக்கும் இந்த நேரத்தில் இவ்வாறு பெண்கள் கூட்டம் அதிகமாக அங்கு கூடியிருந்தது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கூடியிருந்த கூட்டத்தை கலைத்தனர்.

இலவச அரிசி, காய்கறி கொடுப்பதாகக் கூறி பெண்கள் கூட்டத்தை கூட்டியதாக

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *