சிறுகதை

இலவசம் | ராஜா செல்லமுத்து

அந்த நிறுவனம் பரந்து விரிந்தது வளர்ந்திருக்கிறது. ஆயிரம் ஆட்களுக்கு மேல் பணிபுரியும் பெரிய அலுவலகம். ஒருவருக்கொருவர் முகம் தெரிந்து கொள்பவர்கள் மிகக் குறைவு.

எல்லாம் வேறு வேறு இடங்களில் வேலை செய்வதால் பரிச்சயம் என்பது கொஞ்சம் தள்ளியே இருந்தது.

வருடா வருடம் தீபாவளி பொங்கல் என்பது அந்த நிறுவன ஊழியர்களுக்கு கொடுத்து வைத்த ஒன்று சம்பளமும் போனஸூம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்பதில் நிறுவன ஊழியர்கள் நிலையில்லாமலே ஒவ்வோரு மாதமும் கடத்துவார்கள் .

தீபாவளி, பொங்கல் நெருங்கிவிட்டால் அவர்கள் மனது இறுக்கம் குறைந்து இன்பத்தின் நெருக்கம் பெருகும். உருண்டோடும் மாதங்களில் தீபாவளி மாதம் ஓடி வந்து உட்கார்ந்து கொண்டது. உற்சாக கங்கை எல்லோர் மனதிலும் உருண்டோடியது.

‘‘என்ன கண்ணன், தீபாவளி வந்திருச்சு போல ’’

“ஆமா, தமிழ் கண்ணு முழிச்கிட்டு இருக்கும் போதே மாசங்கெல்லாம் கடகடன்னு போயிருச்சே.

ஆமா முழிச்சிட்டு இருக்கும் போதே ஓடிப் போயிருச்சே. முன்னையெல்லாம் ஒரு நாள் பொழுது போகணும்னாலே ரொம்ப கொடுமையா இருக்கும். எப்படா விடியும்; பொழுது எப்படா அடையும்னு இருக்கும்; ஆனா, இப்ப கண்ணு முழிச்சு, மூடுறதுக்குள்ள பட்டுன்னு பொட்டுன்னு இருட்டிப் போகுது என்று பேசிக்கொண்டனர் அந்த பரந்த விரிந்த நிறுவனத்தின் ஊழியர்கள் .

இன்னும் தீபாவளிக்கு ஒரு வாரம் தான் இருக்குல்ல “ஆமா”

“எப்பவும் போல இப்பவும், அதே அல்வா, அவங்க இஷ்டத்துக்கு எடுத்துக் குடுக்கிற டிரஸ் இது தான இந்த வருசமும் தருவாங்க ”

அப்படித்தான் போல அவங்களுக்கு இது ஈஸியா இருக்கும் போல. மொத்தமா எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்துட்டு, செவனேன்னு ஒக்காருராங்க போல என்ற புகழேந்தியின் வார்த்தைக்குக் குறுக்கே நின்றான். கிருஷ்ணன் அப்படியெல்லாம் சொல்லதே

பிறகு

“இதுல ஒரு டிரிக் இருக்கு”

“இதுல என்ன டிரிக் இருக்கு கிருஷ்ணன்”

“அங்கு தான் நீங்க யோசிக்கணும் புகழேந்தி” மொத்தமா எடுத்துக் குடுக்கிறாங்கன்னு நீ நெனச்சிட்டு இருக்க இப்படி மொத்தமா வாங்குறதில அவங்களுக்கு ஒரு கமிஷன் இருக்கு

” என்ன இப்படி சொல்ற?”

“ஆமா புகழேந்தி”

“மொத்தமா டிரஸ் வாங்குறதில மொத்தமா ஸ்வீட், காரம் வாங்குறதில இப்பிடி நெறயா கமிஷன் இருக்கு என்று கிருஷ்ணன் சொன்ன போது புகழேந்திக்குத் தலையே சுற்றியது.

என்ன சொல்ற கிருஷ்ணா

“ஆமா புகழ்….. இங்க எல்லாமே கமிசன் தான். இங்க இருக்கிற ஆயிரம்பேருக்கும் மேல இருக்கிறவங்களுக்கு குடுக்கிற டிரஸ் எவ்வளவு பணத்துக்கு எடுக்க வேண்டியிருக்கும்;

லட்ச ரூவாய்க்கு மேல இருக்குமே

“ம்….. இங்க ஆயிரம் ரூவாய்க்கு பல ரூவா கமிசன் குடுக்கும் போது பல லட்ச ரூவாய்க்கு பர்சேஸ் பண்ணுனா எவ்வளவு ரூவா கமிசன் கெடைக்கும்”

ஆமா நீங்க சொல்றது நெசம் போல இருக்கே” கிருஷ்ணன்,

“நெசம் தான் புகழேந்தி” அது உள்ள போயி பாத்தா தான் புரியும். என்ன பண்றாங்கன்னு இந்த வருசம் அப்படி அவங்க மொத்தமா எல்லாருக்கும் வாங்கிக் குடுக்கிறத நிப்பாட்டனும் .எப்படி ஒன்னால முடியும் கிருஷ்ணன்?

” நாம நெனைச்சா கண்டிப்பா முடியும்”

“சரி நீ செஞ்சுபாரு முடியுமான்னு பாப்போம் என்ற புகழேந்தியின் பேச்சைக் கேட்டு கிருஷ்ணன் அதை ஒரு தீர்மான மாகவே யோசித்தான்.

அன்று ஊழியர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த வருசம் தீவாளிக்கு நம்ம ஆபிஸ்ல குடுக்கிற டிரஸ்ல ஒரு மாற்றம் செய்யலாம்னு இருக்கோம் என்று கிருஷ்ணன் சொல்லும்போது ஏதாவது ஏடா கூடமா சொல்லி குழுப்பி விட்டுராதப்பா. குடுக்கிறதே ஓசி. இதுல வேற பல்ல புடிச்சு பதம் பாக்கணுமா என்ன? குடுக்கிறத வாங்கிக்கிறது மரியாதைன்னு நெனைக்கிறேன் என்ற ஊழியரை மூக்கை உடைத்தார், இன்னொரு ஊழியர் .

நீ ஏன் இப்படி பேசுறே? எல்லாத்துக்கும் தலைய மட்டுமே ஆட்டிட்டு இருந்தம்னா நாம் எதுக்குமே லாயக்கு இல்லாத ஆளா போயிருவோம். நமக்கு தான் போனஸேயொழிய அவங்க இஷ்டத்துககு செய்ய இல்ல நீ சொல்லு கிருஷ்ணா என்ற ஆரதவுக் கரங்களை நீட்டினர். அன்று ஊழியர்களுக்கு ஏக சந்தோசம்.

மறு நாள் நிர்வாகம் கிருஷ்ணனின் முடிவை ஏகமனதாக ஏற்றது.

மறுநாள் எல்லோர் கையிலும் ஒரு கூப்பன் இருந்தது. அதில் இரண்டாயிரத்து ஐ நூறு ரூபாய்க்கான வவுச்சர் இருந்தது.

“எப்படி புகழேந்தி செயிச்சுடா? இந்த கூப்பன கொண்டு போயி எந்த ஜவுளிக்கடையில் வேணும்னாலும் குடுத்து டிரஸ்ஸ எடுத்துக் கிரலாம். ஸ்வீட்டு வாங்கிக்கிரலாம். அதுக்கும் ஒரு கூப்பன் இருக்கு. அதுவும் ஒங்கள கட்டுப்படுத்தாது . நீங்க எங்க வேணும்னாலும் போயி ரஸ் எடுத்துக்கிரலாம். இதுல யாரும் எந்த கமிசனோ எதுவும் செய்ய முடியாது என்று கிருஷ்ணன் சொன்ன போது ஊழியர்கள் எல்லாம் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

எதுவுமே இங்க கேட்டா தான் நடக்கும் ஊழியர்களே …. இப்ப இத கேட்டோம். அது நடந்திருச்சு இனியும் எத வேணும்னாலும் கேட்போம். நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி செய்வோம் என்று சொன்னார் கிருஷ்ணன்.

ஊழியர்கள் தங்களின் கூப்பனை இலவசவங்களை வாங்க விரைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *