செய்திகள்

இலங்கை வர இந்தியர்களுக்குத் தடை

கொழும்பு, மே.6–

கொரோனா பரவல் காரணமாக இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ளது. தினசரி கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, தங்கள் நாட்டில் கொரோனா பரவுவதைத் தடுக்கவும் இந்தியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்கள் தங்கள் நாட்டில் நுழைவதைத் தடுக்கவும் உலகின் பல்வேறு நாடுகள் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளன.

மேலும் இந்த உத்தரவை மீறுவோருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்கள் இந்தியாவில் இருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பத் தடை விதித்துள்ளன.

இதேபோல இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் மே 14ந் தேதி வரை நீட்டித்துள்ளது. அமெரிக்காவும் இந்தியாவிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையும் இந்தியப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை இலங்கை விமானத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *