கொழும்பு, ஜூலை 6–
இலங்கையில் சாலை விபத்து காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 12,000 பேர் உயிரிழந்து வருவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–
நாட்டில் 15 முதல் 44 வயது வரையான வயது கொண்டவா்களின் உயிரிழப்புக்கான காரணங்களில் சாலை விபத்துகள்தான் பெரும்பான்மை பங்கு வகிக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 10,000 முதல் 12,000 பேர் வரை சாலை விபத்துக்கு பலியாகி வருகின்றனர். அந்த வகையில், 45 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.