பாண்டிச்சேரி, ஜன 28
காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை
பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்திருக்கும் படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும், வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் புதுவை முதல்வர் என் ரங்கசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.
இதே போல எம்.பியான பி. வைத்தியலிங்கமும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
கடற்படையினரின் தாக்குதலில் காரைக்காலைச் சேர்ந்த செந்தமிழன், நாகையைச் சேர்ந்த பாபு ஆகிய இருவர் குண்டு காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.