செய்திகள்

இலங்கை அரசியலில் மீண்டும் ஈடுபடும் ராஜபக்சே குடும்பம்

கொழும்பு, மே 27–

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அரசியலைவிட்டு விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினர் அதிபர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவி விலகினார். எதிா்க்கட்சியை சேர்ந்த ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவி ஏற்றார். அதனுடன் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவும் பதவி விலகினார்.

ராஜபக்சே கட்சி பேரணி

இந்த நிலையில், தலாவா என்ற கிராமத்தில் ராஜபக்சக்களின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி நேற்று பேரணி நடத்தியது. இது தொடர்பாக அக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனா பேசுகையில், ‘இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தோ்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளை இந்தப் பேரணி மூலம் தொடங்கி உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

அந்நாட்டின் சட்டப்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 ந்தேதி முதல் அக்டோபர் 16ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#Rajapakshe #srilanka #politics #tamilelam

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *