செய்திகள்

இலங்கையில் 2 திருவள்ளுவர் சிலை: விஜி சந்தோஷம் திறந்து வைக்கிறார்

திரிகோணமலை, ஜன. 27–

இலங்கையில் 2 திருவள்ளுவர் சிலைகளை விஜி சந்தோஷம் திறந்து வைக்கிறார்.

விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 145வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் இலக்கிய கலை விழா 2023 இலங்கை திரிகோணமலையில் நாளை (28–ந் தேதி) நடைபெறுகிறது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜி சந்தோஷம் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி டிஎன் வள்ளிநாயகம், பேராசிரியர் உலகநாயகி பழனி, திலகவதி, புவனேஸ்வரி, உலகத் தமிழ் கலை பேரமைப்பின் நிறுவனர் மகிமை பாலன், சிவபாலன் , திரிகோணமலையின் ஆயர் பேராயர் கிறிஸ்டினா மற்றும் நூற்றுக்கணக்கோர் கலந்து கொள்கின்றனர்.

ஜனவரி 30–ந் தேதி தேதி மாலையில் யாழ்ப்பாண மாநகரப் பூங்காவில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 146 வது திருவள்ளுவர் சிலையை மாநகர மேயர் முன்னிலையில் விஜிபி சந்தோஷம் திறந்து வைக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *