செய்திகள்

இலங்கையில் இந்திய பெண் பலி

கொழும்பு,மே.14–
லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல். இவருக்கும் லண்டனை சேர்ந்த சந்தாரியாவுக்கும் கடந்த மாதம் 19 ம் தேதி திருமணம் நடந்தது. இத்தம்பதி தேன்நிலவுக்காக இலங்கை சென்றனர். காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த இவர்கள் இலங்கையை சுற்றிப் பார்த்தபின் மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்தனர். மருத்துவமனையில் உஷிலா பட்டேல் இறந்தார். வாந்தியால் உடலில் நீர்சத்து குறைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவித்தது. ஆனால் தன் மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணம் என சந்தாரியா குற்றம் சாட்டினார். இதை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. விசாரணை முடியும் வரை சந்தாரியா இங்கிலாந்து செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *