சினிமா

இலங்கைத் தமிழர்களின் வலியும் வேதனையும் சொல்லும் ‘ஆறாம் நிலம்’

இயக்குனர் ஆனந்த ரமணனின் இயக்கியுள்ளார்

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னால், இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக தொலைந்து போன உறவுகளைத் தேடி நித்தமும் போராடும் ஈழத் தமிழர்களின் வலியை சொல்லும் படமே ஆறாம் நிலம் .

ஆனந்த ரமணன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நவயுகா குகராஜா, மன்மதன் பாஸ்கி, ஜீவேஸ்வரன், அன்பரசி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னால் நடந்து வரும் நிகழ்வுகளை உலக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நிலையில் இப்படத்தை ஆனந்த ரமணன் எடுத்திருக்கிறார்.

ஐபிசி தமிழில் குறும் திரைப்படப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற ஆறாம் நிலம் முழுநீள திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தனது கணவனின் கதி என்ன?, அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பது தெரியாமல் கடந்த பத்து வருடங்களாக தேடி வரும் நாயகி, வாழ்வாதாரத்திற்கு உயிருக்கு உத்தரவாதமில்லாத கண்ணிவெடி அகற்றும் வேலைக்குச் செல்லும் அப்பாவி மக்கள், இவர்களை வைத்து அரசியல் செய்யும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் மற்றும் போராட்ட அமைப்புகள் என நிகழ்வை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

உலக மக்களுக்கு ஈழத்தமிழர்கள் படும் துயரங்களும் பலிகளும் என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எடுத்திருக்கிறார். யூடியூப் சேனலில் வெளியிடப்படுகிறது.

படப்பிடிப்பு முழுவதும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு – சாந்தகுமார், இசை சிந்தக ஜெயக்கொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *